முகப்பு
தமிழ்நாடு

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

ஈரோடு திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 3:22 PM
ஈரோடு திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா.
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 2:25 PM

திண்டல் வேலாயுதசுவாமி-அபிராமி அம்பிகை உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஈரோடு திண்டலில் பிரசித்தி பெற்ற வேலாயுதசுவாமி, அபிராமி அம்மன் உடனமர் அமர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இக்கோயில் கடந்த 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்டப்பட்டது. இந்த கோயிலில் கந்தசஷ்டி விழா, கிருத்திகை, விசேஷ நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறும். இக்கோயிலில் தங்க தேர் வழிபாடு பிரசித்தி பெற்றது. இக்கோயிலுக்கான கும்பாபிஷேக விழாவின் தொடக்க நிகழ்வாக கடந்த 16ஆம் தேதி இரவு 9 மணிக்கு கிராம சாந்தி நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து தினந்தோறும் விநாயகர் பூஜை, புண்யாஹம், மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், திசா ஹோமம், சாந்தி ஹோமம் நடந்து வந்தது.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 3:15 PM

19ஆம் தேதி காலை விநாயகர் பூஜை, புண்யாஹம், ஆச்சார்ய அஸ்திராபிஷேகம், தசவித ஸ்நானம், மூர்த்தி ஹோமமும், உத்தமபசஷ யாகசாலை நிர்மானமும், மாலை திருமுறை பாராயணம், விநாயகர் பூஜை, புண்யாஹம், மிருத்சங்கிரஹணம், அங்குரார்ப் பணம், ரசஷாபந்த கனம், கும்ப அலங்காரம், கலாஹர்ஷணம், யாகசாலை பிரவேசம், மண்டப பூஜை வேதிகார்ச்சனை உத்தமபசஷ அக்னிவிபஜனம், திரவ்யாஹீதி, பூரணாஹீதி ஆகிய பூஜைகள் நடைபெற்றன. 20ஆம் தேதி காலை விநாயகர் பூஜை, புண்யாஹம், விசேஷசந்தி, இரண்டாம் கால யாக பூஜை, புதிய விக்ரஹகங்கள் அதிவாச கிரியைகள், கோபுர கலசஸ்தாபனம், மூலஸ்தான மற்றும் பரிவார மூர்த்திகள் யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், திரவ்யாஹீதி, பூர்ணாஹீதி ஆகிய பூஜைகளும், மாலை விநாயகர் பூஜை, புண்யாஹம், விசேஷசந்தி, மூன்றாம் கால யாகசாலை பூஜை, திரவ்யாஹீதி, பூரணாஹீதி நடைபெற்றது.

Advertisement

21ஆம் தேதி காலை திருமுறை பாராயணம், விநாயகர் பூஜை, புண்யாஹம், விசேஷசந்தி, நான்காம் கால யாகசாலை பூஜை, திரவ்யா ஹீதி, பூர்ணாஹீதி, தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. மாலை 5 மணி முதல் 9 மணி வரை திருமுறை பாராயணம், விநாயகர் பூஜை, புண்யாஹம், விசேஷசந்தி, ஐந்தாம் கால யாகசாலை பூஜை, பிம்பசுத்தி ரசக்ஷா பந்தனம், நாடி சந்தானம், ஸ்பர்ஷாஹீதி, திரவ்யாஹீதி, பூர்ணாஹீதி தொடர்ந்து தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கான பூஜைகள் நேற்று அதிகாலை 3 மணி முதல் திருமுறை பாராயணம், விநாயகர் பூஜை, புண்யாஹம், விஷேசசந்தி, ஆறாம் கால யாகசாலை பூஜை, திரவ்யாஹீதி, பூர்ணாஹீதி நடைபெற்று சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 3:15 PM

காலை 5.30 மணி முதல் யாத்ரா தனம் கடம் புறப்பாடு நடந்தது. காலை 6.45 மணி முதல் 7 மணி வரை, ஸ்ரீ வேலாயுத சுவாமி, ஸ்ரீ அபிராமி அம்மன் உடனமர் அமிர்த கடேஸ்வரர் மூலஸ்தான கோபுரம் மற்றும் பரிவார விமான ராஜகோபுரங்கள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, காலை 7.10 மணி முதல் 7.45 வரை, ஸ்ரீ வேலாயுத சுவாமி ஸ்ரீ அபிராமி அம்மன் உடனமர் அமர்தகடேஸ்வரர் மற்றும் அனைத்து பரிவார மூலஸ்தான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது, மேளதாளங்கள் முழங்க கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என பக்தர்கள் கோஷமிட்டனர். தொடர்ந்து, ராஜகோபுரத்தில் இருந்த கலசங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, பச்சைக் கொடி காட்டவும் கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. அதைத் தொடர்ந்து கலசங்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதே நேரத்தில், அபிராமி அம்பிகை உடனுறை அமிர்தகடேஸ்வரர் சன்னதிகளில் உள்ள கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், தமிழில் மந்திரங்கள் ஓதப்பட்டது. டிரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அப்போது, பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா, கடம்பனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா என கோஷமிட்டது விண்ணை பிளக்கும் அளவிற்கு இருந்தது.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 3:15 PM

மாலை 6 மணிக்கு மகா கும்பாபிஷேகம், சிறப்பு அலங்காரம், தசதானம், தச தரிசனம், திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இவ்விழாவையொட்டி, ஈரோடு மட்டுமின்றி, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்த மகா கும்பாபிஷேக விழாவில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, மாவட்ட எஸ்.பி சுஜாதா, கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ வி.சி.சந்திரகுமார், மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட அறக்காவலர் குழுத்தலைவர் எல்லப்பாளையம் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

summary

The Maha Kumbabhishekam ceremony was held with great fanfare at the Erode Tindal Velayudaswamy Temple.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.