முகப்பு
தமிழ்நாடு

மதுரையில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட நுழைவாயிலில் சர்ச்சையை ஏற்படுத்திய படம்!

பொதுக்கூட்டம் நடைபெறும் நுழைவாயிலில் படம் வைப்பதில் சர்ச்சை பற்றி..

Updated On : 28 பிப்ரவரி 2026, 6:23 pm IST
நுழைவாயிலில் நீக்கப்பட்ட பெரியார் படம்
பகிர்:

மதுரையில் பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் நுழைவாயிலில் பெரியார் படம் வைக்கப்பட்டது சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மார்ச் 1-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மாலை 2:45 மணிக்கு மேல் மதுரை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி‌. மதுரை விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

அதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார், அதனை தொடர்ந்து மதுரை மண்டேலா நகர் பகுதியில் 150 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் 4.30 மணிக்கு பங்கேற்கிறார்.

Advertisement

Advertisement

இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அமமுக டிடிவி தினகரன், பாமக அன்புமணி ராமதாஸ், ஜி கே வாசன் ஐ ஜே கே நிறுவனர் பாரிவேந்தர், ஜான்பாண்டி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்க உள்ளனர்.

மதுரை மண்டோல நகர் நகர் பகுதியில் பிரதமர் பங்கேற்கும் தேசிய ஜனநாயக பொதுக்கூட்டத்தில் ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விழா மேடையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஜெயலலிதா படங்களும் அதேபோல மதுரையை அடையாளப்படுத்தும் விதமாக மீனாட்சியம்மன் கோயில் மற்றும் திருப்பரங்குன்றம் கோயில் கோபுரங்கள் இடம் பெற்றுள்ளது.

மேலும், முகப்பு வாயிலில் பெரியார், அண்ணா படங்கள், மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களில் படங்களும் இடம்பெற்றது. பெரியார் படம் வைக்கப்பட்ட விவகாரம் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் தற்போது பெரியாரின் படம் நீக்கப்பட்டு அந்த இடத்தில் தாமரைப் பூவின் படம் இடம்பிடித்துள்ளது.

summary

A picture of Periyar placed at the entrance to a public meeting to be attended by the Prime Minister in Madurai has now been removed after causing controversy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments