ப்ரீத்தி ஷர்மாவின் சாமந்தி தொடரின் ஒளிபரப்பு தேதி!
சாமந்தி தொடரின் ஒளிபரப்பு தேதி குறித்து...
நடிகை ப்ரீத்தி ஷர்மா நடிக்கும் புதிய தொடரின் ஒளிபரப்பு தேதி குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
சித்தி - 2 தொடரில் வெண்பா பாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றவர் நடிகை ப்ரீத்தி ஷர்மா. இவர் தமிழ், தெலுங்கு மொழிகளில் எடுக்கப்படும் தொடர்களில் நடித்து வருகிறார்.
இவர், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மலர் தொடரில் நடித்திருந்தார். பின்னர், தனிப்பட்ட காரணங்களால் இந்தத் தொடரிலிருந்து விலகினார்.
Advertisement
Advertisement
ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இவர் நடித்திருந்த பத்மதி சந்தியாராகம் தொடர், தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் ப்ரீத்தி ஷர்மா நடிக்கிறார். இந்தத் தொடருக்கு சாமந்தி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் இந்தத் தொடரில், விஷ்வா, ஷமிதா, சுர்ஜித் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். சரிகம நிறுவனம் இந்தத் தொடரை தயாரிக்கிறது.
அக்கா வாழும் வீட்டில் பணிப் பெண்ணாக வேலை செய்யும் சாமந்தியை(ப்ரீத்தி ஷர்மா) பிரதானப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.
சாமந்தி தொடர் வரும் ஜூலை 13 ஆம் தேதி முதல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கெட்டி மேளம் தொடர் அண்மையில் நிறைவடைந்த நிலையில், இந்தத் தொடருக்கு மாற்றாக, சாமந்தி தொடர் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.