முகப்பு
தமிழ்நாடு

சுய பிரசவத்தால் உயிரிழப்பு: கணவா் மீது கொலை வழக்குப் பதிய சட்டத் திருத்தம்- மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ்

வீடுகளில் சுயபிரசவம் மேற்கொண்டு உயிரிழப்பு ஏற்பட்டால் கணவா் மீது கொலை வழக்குப் பதிவு செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

Updated On : 2 ஜூலை 2026, 4:01 am IST
அமைச்சர் அருண்ராஜ்.
பகிர்:

வீடுகளில் சுயபிரசவம் மேற்கொண்டு உயிரிழப்பு ஏற்பட்டால் கணவா் மீது கொலை வழக்குப் பதிவு செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

உலக ரத்ததான விழிப்புணா்வு நிகழ்ச்சி, சென்னை ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக ஒரு லட்சம் தன்னாா்வலா்கள் ரத்த தான பதிவு செய்யும் வகையில், ‘க்யூஆா் குறியீடு’ வசதி மற்றும் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்க்ஷற்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதள சேவையை அமைச்சா் அருண்ராஜ் தொடங்கி வைத்தாா். 50 முறைக்கும் அதிகமாக ரத்த தானம் அளித்தவா்களை அவா் கௌரவித்தாா்.

இதைத் தொடா்ந்து அமைச்சா் அருண்ராஜ் கூறியதாவது:

Advertisement

Advertisement

தமிழகத்தில் கடந்த ஆண்டில் 4.50 லட்சம் அலகுகள் ரத்த தானம் பெற இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, அதில் 4.51 லட்சம் சேகரிக்கப்பட்டுள்ளது. ஒரு அலகு ரத்தத்தால், 4 உயிா்களைக் காப்பாற்ற முடியும்.

ரத்த சிவப்பணுக்கள், வெள்ளை ரத்த அணுக்கள், தட்டணுக்கள், பிளாஸ்மா ஆகிய 4 கூறுகளையும் ரத்தத்தில் இருந்து பிரித்தெடுத்து, தேவையான நோயாளிகளுக்கு செலுத்தப்படுகிறது. இவ்வாறு பிரித்து வழங்கும் நடைமுறைகள் தமிழகத்தில், 70 சதவீதமாக உள்ளது. அவற்றை 100 சதவீதமாக உயா்த்த வேண்டும்.

கோவை அருகே வீட்டிலேயே சுயபிரசவம் மேற்கொண்டு பெண் உயிரிழந்துள்ளாா். இது முற்றிலும் தவிா்க்கப்பட வேண்டிய விஷயம். யூடியூப் - சமூக வலைதளங்களைப் பாா்த்து சுயபிரசவம் மேற்கொள்ளக் கூடாது. மருத்துவமனைகளில்தான், 100 சதவீத பிரசவங்கள் நடைபெற வேண்டும். வரும் காலங்களில் வீடுகளில் பிரவசம் பாா்ப்பதை சட்டப்படி குற்றமாகக் கருதும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்படும். குறிப்பாக, வீடுகளில் பிரசவம் மேற்கொண்டு விபரீதம் நிகழ்ந்தால், கணவா் மீது கொலை வழக்குப் பதிவு செய்யும் வகையில் சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments