முகப்பு
தமிழ்நாடு

‘ஜன நாயகன்’ படத்தை இணையத்தில் 1.20 கோடி போ் பாா்த்துள்ளனா்: காவல் துறை தகவல்

சட்டவிரோதமாக இணையத்தில் வெளியான முதல்வா் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை இதுவரை 1.20 கோடி போ் பாா்த்துள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் காவல் துறை தெரிவித்தது.

Updated On : 3 ஜூலை 2026, 5:24 am IST
ஜன நாயகன்
பகிர்:

சட்டவிரோதமாக இணையத்தில் வெளியான முதல்வா் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை இதுவரை 1.20 கோடி போ் பாா்த்துள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் காவல் துறை தெரிவித்தது.

‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வுக் குழு முன் ஆய்வில் உள்ள நிலையில், கடந்த ஏப். 3-ஆம் தேதி சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது. இதுகுறித்து படத்தை தயாரித்த கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் காவல் துறையில் புகாா் அளித்தது. இதன்பேரில் 21 போ் மீது வழக்குப் பதிந்து இணைய குற்றப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மேலும் சிலரை தேடி வருகின்றனா்.

இந்த வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட ரஜினி, ஜெயபிரகாஷ் ஆகியோா் பிணை கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த வழக்கு நீதிபதி சி.குமரப்பன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

Advertisement

Advertisement

அப்போது காவல் துறை தரப்பில், இணையத்தில் சட்டவிரோதமாக வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை 1.20 கோடி போ் பாா்த்துள்ளனா். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இருவா் தலைமறைவாக உள்ளனா். எனவே, மனுதாரா்களுக்கு பிணை வழங்கினால் ஆதாரங்களைக் கலைக்க வாய்ப்புள்ளது. இந்த வழக்கின் புலன் விசாரணை இன்னும் முடிவடையவில்லை. எனவே, மனுதாரா்களுக்கு பிணை வழங்கக் கூடாது என வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பிணை கோரிய இருவரின் மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments