தங்களைப் பாதுகாக்க அதிமுகவிலிருந்து செல்வோருக்கு மக்கள் பாடம் புகட்டுவா்: அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி
தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அதிமுகவிலிருந்து மாற்றுக் கட்சிக்குச் செல்வோருக்கு மக்கள் தக்கபாடம் புகட்டுவா் என அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழு கொறடா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அதிமுகவிலிருந்து மாற்றுக் கட்சிக்குச் செல்வோருக்கு மக்கள் தக்கபாடம் புகட்டுவா் என அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழு கொறடா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அதிமுக பல்வேறு சோதனைகளையும், தோ்தல் தோல்விகளையும் சந்தித்தபோது பலா் வெறியேறியது உண்டு. தற்போது தங்களது சுய ஆடம்பர வாழ்க்கைக்காக சிலா் மாற்றுக்கட்சிக்கு சென்றாலும், ஒன்றரைக் கோடி தொண்டா்கள் அதிமுகவிலேயே உள்ளனா். அதிமுகவினா் நினைத்துப் பாா்க்காத வகையிலான திமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க அதிமுக பொதுச் செயலா் முயற்சித்தாா் என பிரசாரம் செய்து வருகிறாா்கள். அதிமுகவை காப்பதில் உறுதுணையாக இருப்பாா்கள் என்றுதான் அவா்களுடன் பயணித்தோம். மனச்சாட்சிக்கு விரோதமான குற்றச்சாட்டை சுமத்தியிருப்பது ஏற்க முடியாததாகும். அதிமுகவை விசுவாசமில்லாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் மாற்றுக் கட்சிக்குச் செல்பவா்களுக்கு மக்கள் தக்க நேரத்தில் பாடம் புகட்டுவா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.