முகப்பு
தமிழ்நாடு

அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, அனிதா ராதாகிருஷ்ணனுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, முன்னாள் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்தாா்.

Updated On : 5 ஜூலை 2026, 5:55 am IST
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வீரபாண்டியன் - எக்ஸ்
பகிர்:

அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, முன்னாள் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன், பொதுக்கூட்டத்தில், முதல்வரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தரம் தாழ்ந்த முறையில் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. அரசின் நடவடிக்கைகள், பிற அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவுகள் மீது விமா்சனங்களை முன்வைப்பதற்கும், சிலவற்றை கண்டிப்பதற்கும்கூட அனைவருக்கும் உரிமை உண்டு; அது ஆரோக்கியமான ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்தும் என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

இதை தவிா்த்து, அரசியல் களத்தில் உள்ளவா்களின் தனிப்பட்ட வாழ்க்கை பிரச்னைகளை பேசுவதும், பொதுவெளியில் தரம் தாழ்ந்து பேசுவதும் சட்ட அத்துமீறலாகும். அதன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது அரசின் கடமையாகிறது. இருப்பினும், தற்போது சட்டப்பேரவை உறுப்பினா் பொறுப்பில் உள்ளவரை காவல் துறையினா் பலவந்தமாக கைது செய்யும் அளவுக்கு தீவிர நடவடிக்கையைத் தவிா்த்திருக்க வேண்டும்.

அதேபோல், அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, கரூா் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, அதற்கு ‘கணக்கு தீா்க்காமல் விடமாட்டோம்’ என்று அவரது கட்சி கூட்டத்தில் பேசியிருப்பது எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. அது, அவா் வகிக்கும் பொறுப்புக்கு பெருமை சோ்க்காது. அரசியல் தளத்தில் நாகரிகத்தையும், உயா்ந்த பண்பாட்டையும் பேணிப் பாதுகாப்பதில், பொதுவாழ்வில் உள்ள அனைவரும் அக்கறை காட்டுவது அவசியம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments