முகப்பு
தமிழ்நாடு

ஆதியோகி, தியானலிங்கத்தில் பராமரிப்பு பணிகள்; ஜூலை 7-ஆம் தேதி தரிசனத்திற்கு அனுமதி இல்லை

கோவை ஈஷாவில் உள்ள தியானலிங்கம், லிங்க பைரவி மற்றும் ஆதியோகி வளாகங்களில் நடைபெற உள்ள பராமரிப்பு பணிகள் தொடர்பாக...

Updated On : 5 ஜூலை 2026, 4:02 pm IST
கோவை ஈஷாவில் உள்ள தியானலிங்கம், லிங்க பைரவி - டிஎன்எஸ்
பகிர்:

கோவை: கோவை ஈஷாவில் உள்ள தியானலிங்கம், லிங்க பைரவி மற்றும் ஆதியோகி வளாகங்களில் நடைபெற உள்ள பராமரிப்பு பணிகளை முன்னிட்டு வரும் ஜூலை 7-ஆம் தேதி தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை ஈஷா யோகா மையத்திற்கு தியானலிங்கம், லிங்கபைரவி மற்றும் ஆதியோகியை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உலகம் முழுவதிலும் இருந்து வருகை தருகின்றனர்.

இந்த நிலையில், பராமரிப்பு பணிகளுக்காக ஜூலை 7-ஆம் தேதி ஒரு நாள் மட்டும் ஆதியோகி, தியானலிங்கம் மற்றும் லிங்கபைரவி வளாகங்களில் பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி இல்லை. இடையூறுகளுக்கு வருந்துகிறோம். மேலும் ஜூலை 8-ஆம் தேதி முதல் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்" எனக் கூறப்பட்டு உள்ளது.

Advertisement

Advertisement

summary

Maintenance work at Adiyogi and Dhyanalinga; no access for darshan on July 7

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments