முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் மாநில இளைஞர் விருது: ஜூலை 13 வரை விண்ணப்பிக்கலாம்

முதல்வர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

Updated On : 6 ஜூலை 2026, 12:52 pm IST
முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்
பகிர்:

முதல்வர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க ஜூலை 13 ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமுதாய வளர்ச்சிக்காகத் தன்னார்வத்துடன் சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் 2015 ஆம் ஆண்டு முதல் முதல்வர் மாநில இளைஞர் விருது ஆண்டுதோறும் சுதந்திர நாள் விழாவில் 15 முதல் 35 வயதுக்கு உள்பட்ட 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதிற்குத் தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ. 1,00,000 ரொக்கம், பாராட்டுப் பத்திரம், பதக்கம் ஆகியவை அடங்கும்.

2026 ஆம் ஆண்டிற்கான விருதிற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் இன்றுடன் (ஜூலை 6) முடிவடைதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை (ஜூலை 13) வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

விருதுக்கு விண்ணப்பிப்போரின் 1.4.2025 முதல் 31.3.2026 ஆம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருக்க வேண்டும்.

மத்திய-மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுவோர் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ‌w‌w‌w.‌s‌d​a‌t.‌t‌n.‌g‌o‌v.‌i‌n இணையதளத்தில் ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை ஜூலை 13 ஆம் தேதி மாலை 5.45 மணி வரை அனுப்பலாம் என்றார் அவர்.

எனவே, தகுதியுடையவர்கள் உரிய காலத்திற்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 2026 ஆம் ஆண்டிற்கான இந்த விருது வரும் சுதந்திர நாள்(ஆகஸ்ட் 15) நடைபெறவுள்ள சுதந்திர நாள் விழாவில் வழங்கப்படும்.

summary

Chief Minister's State Youth Award: Applications accepted until July 13

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments