முகப்பு
தமிழ்நாடு

திமுக கூட்டணி இப்போது இல்லை: பெ. சண்முகம்

தமிழ்நாட்டில் திமுக என்ற கூட்டணி இப்போது இல்லை என பெ. சண்முகம் விமர்சித்துள்ளது குறித்து...

Updated On : 7 ஜூன் 2026, 4:07 pm IST
செய்தியாளர் சந்திப்பில் பெ. சண்முகம் - யூடியூப்
பகிர்:

தமிழ்நாட்டில் திமுக என்ற கூட்டணி இப்போது இல்லை என மார்க்சிஸ் கம்யூனிஸ் கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களுடன் பெ. சண்முகம் பேசியதாவது:

''தவெகவுக்கு ஆதரவு நிலைப்பாடு என்பது சுயேட்சையாக எடுத்த முடிவு என்பதை தெளிவாக கூறிவிட்டோம். இன்னொரு கட்சியிடம் கேட்டு முடிவு எடுக்க வேண்டியதில்லை.

Advertisement

Advertisement

தமிழ்நாடு நலன் சார்ந்த பிரச்னைகளில் ஒத்த கருத்துடைய பிரச்னைகளில் திமுகவுடன் போராடுவோம் எனக் கூறியுள்ளோம்.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்பது இப்போது இல்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி, 3 மாதங்களுக்குக் கூட தாங்காது என சொல்லக் கூடாது. மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி என யார் கூறினாலும் தவறு. எல்லா வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றிவிட முடியாது.

இங்கு எதுவும் புதிதாக நடந்துவிடவில்லை. அதிமுகவின் அழிவுக்கு பாஜகதான் காரணம்'' என பெ. சண்முகம் குறிப்பிட்டார்.

summary

DMK alliance no longer exists CPIM Shanmugam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.