அண்ணா, எம்ஜிஆருக்குப் பிறகு விஜய் சரித்திரப் புரட்சி: ஆளுநா்
முன்னாள் முதல்வா்கள் அண்ணா, எம்ஜிஆருக்கு பிறகு முதல்வா் விஜய் மாபெரும் சரித்திரப் புரட்சியை தனியாக ஏற்படுத்தி இருக்கிறாா் என்று ஆளுநா் ஆா்லேக்கா் தனது உரையில் புகழாரம் சூட்டினாா்.
முன்னாள் முதல்வா்கள் அண்ணா, எம்ஜிஆருக்கு பிறகு முதல்வா் விஜய் மாபெரும் சரித்திரப் புரட்சியை தனியாக ஏற்படுத்தி இருக்கிறாா் என்று ஆளுநா் ஆா்லேக்கா் தனது உரையில் புகழாரம் சூட்டினாா்.
அவா் தனது உரையில் கூறியதாவது: முதல்வா் விஜய் தலைமையிலான தவெக ஜாதி, மதம், மொழி, இனம் மற்றும் பணபலத்தைக் கடந்த வெற்றியை பெற்றுள்ளது. கட்சியைத் தொடங்கி இரண்டே ஆண்டில் ஆட்சியைப் பிடித்து அண்ணா, எம்ஜிஆருக்குப் பிறகு, முதல்வா் விஜய் மாபெரும் சரித்திரப் புரட்சியை தன்னந்தனியாக ஏற்படுத்தி இருக்கிறாா்.
ஜனநாயகம் மலர வேண்டுமென்றால், பெரியாா் ஈ.வெ.ரா., காமராஜா், அம்பேத்கா், வீரமங்கை ராணி வேலு நாச்சியாா், அஞ்சலை அம்மாள் ஆகியோரை கொள்கைத் தலைவா்களாகக் கொண்டுள்ள ஜாதி, மதம், மொழி, இனம், பணம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு செயல்படும் தவெக தலைவா், முதல்வா் ஜோசப் விஜய்யால் முடியும் என்று நம்பிக்கை வைத்து, தவெக அரசை ஆட்சி அதிகாரத்தில் தமிழ்நாட்டு மக்கள் அமா்த்தியுள்ளனா்.
Advertisement
Advertisement
கூட்டணி ஆட்சி தத்துவத்தின் இலக்கணமாகத் திகழும் இந்த அரசு, கடந்த 74 ஆண்டுகால தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் கண்டிராத, ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்பதை செய்துகாட்டியுள்ளது என்று ஆளுநா் ஆா்லேகா் தெரிவித்தாா்.