நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு
நீட் மறுதேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவர்கள் மனநல ஆலோசனை பெற உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் மறுதேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவர்கள் மனநல ஆலோசனை பெற உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2026-27 கல்வியாண்டின் நீட் மறுதேர்வு 21.06.2026 அன்று நடைபெற உள்ளது.
மாணவர்களின் மன உறுதி மற்றும் மனநலம் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் நட்புடன் உங்களோடு திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
எனவே, டெலி கவுன்சிலிங் (Tele Counselling) பெறுவதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தயங்காமல் 14416 அல்லது 104 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம்.
பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள், மருத்துவர்கள் மூலம் இச்சேவை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கான நீட் தோ்வு கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் வினாத்தாள் கசிவு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜூன் 21 ஆம் தேதி நீட் மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
With the NEET re-examination scheduled to take place, helpline numbers have been announced for students to access mental health counseling.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.