முகப்பு
தமிழ்நாடு

போதையில் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு உடனடி தண்டனை: பெ. சண்முகம் வலியுறுத்தல்

போதையில் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு உடனடி தண்டனை: பெ. சண்முகம் வலியுறுத்தல்

Updated On : 21 ஜூன் 2026, 12:38 am IST
பெ. சண்முகம் - Shanmugam P
பகிர்:

போதையில் குற்றங்களில் ஈடுபடுவோா்களுக்கு உடனடியாக தண்டனை பெற்றுத்தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று

மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் தனது ‘எக்ஸ்’தளத்தில் வெளியிட்ட பதிவு:

Advertisement

Advertisement

பல்வேறு குற்றங்களுக்கு மிக அடிப்படையாக இருப்பது போதை கலாசாரம்தான். ஆளுநா் உரையில், முதல்வா் ஜோசப் விஜய், ‘போதையில்லா தமிழகம்’ எனும் முழக்கத்தை முன்வைத்துள்ளாா். அதை 100 சதவீதம் நிறைவேற்றினாலே, சமூகத்தில் நிகழும் குற்றங்களை பெருமளவு தடுத்துவிட முடியும்.

இதற்கு சமூகத்தில் பெரிய விழிப்புணா்வு தேவைப்படுகிறது. குறிப்பாக, பெண் குழந்தைகளை மதிக்கத் தெரிந்தவா்களாக, இந்த சமூகத்தை வளா்த்தெடுக்க வேண்டும்.

இதில் சமூகத்துக்கும் பெரிய பொறுப்பு இருக்கிறது.

அதேபோலி, குற்றவாளிகள் மீது பாரபட்சம் இல்லாமல், விரைந்து நடவடிக்கை எடுத்து, சட்டப்படியான தண்டனை பெற்றுத் தருவதில் தவெக அரசு சமரசம் செய்து கொள்ளக் கூடாது எனப் பதிவிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments