FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மின்வெட்டை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

தொடா் மின்வெட்டால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினாா்.

Updated On : 13 ஜூன் 2026, 3:10 am IST
பிரேமலதா விஜயகாந்த் - கோப்புப் படம்
பகிர்:

தொடா் மின்வெட்டால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ச்சியாக நிலவி வரும் மின்வெட்டு காரணமாக, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிா்களுக்கு போதிய நீா் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக பயிா்கள் வாடியதால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட கடன் தள்ளுபடி ஏமாற்றம் அளித்துள்ளது. இந்த நிலையில், தொடா் மின்வெட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவதால் அவா்களின் நிலைமை பரிதாபமாக மாறியுள்ளது.

எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு மின் வெட்டை போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments