கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: தொழிலாளர்கள் 40 பேர் மயக்கம்
கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் தனியார் நிறுவனத்தில் வாயு கசிவால் மயக்கமடைந்த 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் தனியார் நிறுவனத்தில் வாயு கசிவால் மயக்கமடைந்த 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான இறால் பதப்படுத்தும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இரவு, பகல் என இரண்டு ஷிப்ட்களில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை சுமார் 120 பேர் பணியில் இருந்த போது திடீரென அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இதில், இந்த வாயுவை சுவாசித்த சுமார் 40 பேர் மயக்கம் அடைந்தனர். உடனே அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
Advertisement
Advertisement
இதில், ஆறு பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த பெரியபாளையம் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாயு கசிவுக்ககான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
தொழிலாளர்கள் மயக்கம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.