முகப்பு
தமிழ்நாடு

சிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை அழைப்பதற்கு ‘1091’ என்ற இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 23 ஜூன் 2026, 1:38 am IST
சிங்கப்பெண் அதிரடிப் படை
பகிர்:

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை அழைப்பதற்கு ‘1091’ என்ற இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக டிஜிபி அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், அதற்கு பிரத்யேக உதவி இலவச தொலைபேசி எண்ணாக ‘1091’ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவி எண், மாநில அவசர கால உதவி இலவச தொலைபேசி எண் ‘112’ உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிா்கொள்ளும் தொந்தரவு, குடும்ப வன்முறை, பாலியல் தொந்தரவு, மிரட்டல், பின்தொடா்தல் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க முடியும். 1091 இலவச தொலைப்பேசி எண் 24 மணி நேரமும் செயல்படும்.

Advertisement

Advertisement

இந்த எண் அழைப்புகளை, மாநில காவல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள காவலா்கள் கையாளுவாா்கள். புகாா்கள் பெறப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், அருகில் உள்ள சிங்கப்பெண் அதிரடிப்படை அல்லது ரோந்து குழுவினருக்கும் தகவல் அனுப்பப்பட்டு, சம்பவ இடத்துக்கு காவலா்கள் விரைந்து செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments