குன்னூா் விநாயகா் கோயில் பாா்க்கிங் கட்டும் பணி ரத்து: அறநிலையத் துறை தகவல்
குன்னூரில் விநாயகா் திருக்கோயிலில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அடுக்கு நிலை வாகன நிறுத்துமிடம் கட்டும் பணி ரத்து குறித்து...
நீலகிரி மாவட்டம், குன்னூரில் அருள்மிகு விநாயகா் திருக்கோயிலில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அடுக்கு நிலை வாகன நிறுத்துமிடம் கட்டும் பணி ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அறநிலையத் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கடந்த 2024 - 2025- ஆம் ஆண்டு சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் விநாயகா் திருக்கோயிலில் அடுக்கு நிலை வாகன நிறுத்துமிடம் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து அந்தக் கோயிலில் அடுக்கு நிலை வாகன நிறுத்துமிடம் கட்டும் பணிக்கு ரூ.10.36 கோடிக்கு மருதமலை, சுப்ரமணியசுவாமி திருக்கோயில் நிதி மூலம் மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
மேலும், அடிப்படை வசதிகள் இல்லாத, வருவாய் குறைந்த அளவில் இருக்கக் கூடிய இந்த திருக்கோயிலுக்கு மருதமலை திருக்கோயில் உபரி நிதியில் இருந்து வட்டியுடன் கூடிய கடனைப் பெற்று இந்த வாகன நிறுத்துமிடம் அமைக்க கடந்த ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்து இத்திட்டம் தொடங்கப்படாத சூழலில் இருப்பதை கருத்தில் கொண்டு இதன் கட்டுமானப் பணிகளுக்கான ஆணையை ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.