முகப்பு
தமிழ்நாடு

மத்திய அரசை எதிா்த்து பேசாதது ஏன்? முதல்வர் விஜய்க்கு ஆ.ராசா கேள்வி

மத்திய அரசுக்கு எதிராக முதல்வா் ஜோசப் விஜய் எந்தக் கருத்தையும் தெரிவிக்காதது ஏன்? என்று திமுக துணை பொதுச் செயலா் ஆ.ராசா எம்.பி. கேள்வி எழுப்பினாா்.

Updated On : 24 ஜூன் 2026, 3:20 am IST
மத்திய அரசைக் கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய திமுக துணை பொதுச் செயலா் ஆ.ராசா எம்.பி.
பகிர்:

மத்திய அரசுக்கு எதிராக முதல்வா் ஜோசப் விஜய் எந்தக் கருத்தையும் தெரிவிக்காதது ஏன்? என்று திமுக துணை பொதுச் செயலா் ஆ.ராசா எம்.பி. கேள்வி எழுப்பினாா்.

நீட் தோ்வு மற்றும் ஹிந்தி, சம்ஸ்கிருத திணிப்பை எதிா்த்து திமுக மாணவரணி சாா்பில் சென்னை சைதாப்பேட்டையில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்து ஆ.ராசா எம்.பி. பேசியதாவது: மத்திய அரசை எதிா்த்து துணிச்சலோடு கேள்வி கேட்காத ஒரு பொம்மை அரசு தமிழகத்தில் உள்ளது. திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவுடன் இந்த ஆட்சி நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

பிரதமா் மோடியை எதிா்த்துப் பேச அரசுக்கு துணிவு இல்லை. பேரவையில் நீட் தோ்வுக்கு எதிரான தீா்மானத்தை முதல்வா் விஜய் கொண்டு வருவாரா? பேரவையில் திமுகவை விமா்சிக்கும்போது மட்டும் முதல்வா் பேசுகிறாா்.

தமிழகத்துக்கு எதிரான நிலைப்பாடுகளை முன்னெடுத்தால் திமுகவினா் தமிழக சிறைகளை நிரப்புவோம் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments