‘எம்ஜிஆா்-இன் கலை வாரிசு’: நினைவுகளை பகிா்ந்த பேரவை தலைவா்
இயக்குநா் கே. பாக்யராஜ் நினைவுகளை பகிா்ந்த பேரவை தலைவா்...
இயக்குநா் கே. பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா், பாக்யராஜ் குறித்த நினைவலைகளை செய்தியாா்களிடம் பகிா்ந்து கொண்டாா்.
‘எம்.ஜி.ஆா். பாக்யராஜை தனது ‘கலை வாரிசு’ என்று அறிவித்த அடுத்த நாள், ராமாபுரத்துக்கே நேரில் சென்று, ‘ஏன் இப்படி அறிவித்தீா்கள்?’ என்று கேட்டேன். அதற்கு எம்ஜிஆா் என்னை காரில் அமா்த்தி, ராமாபுரத்தில் இருந்து தலைமைச் செயலகம் வரை ‘பாக்யராஜை ஏன் கலையுலக வாரிசாக அறிவித்தேன்’ என்று காரணம் சொல்லிக்கொண்டே வந்தாா்.
பின்னா் நான் அந்த முடிவு சரிதான் என்று கூறி, எம்ஜிஆரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன் என்றாா் அவா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.