முகப்பு
தமிழ்நாடு

இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!

இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு நாளை காலை இறுதிச்சடங்கு நடைபெறும் என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜூன் 2026, 6:15 pm IST
மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜ் - கோப்புப் படம்
பகிர்:

இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு நாளை காலை இறுதிச்சடங்கு நடைபெறும் என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மறைந்த இயக்குநரும், நடிகருமான பாக்யராஜின் இறுதி ஊர்வலம் நாளை காலை 9.30 மணியளவில் தொடங்கும். பாக்யராஜ் உடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் நாளை காலை 9 மணி வரையில் வைக்கப்படும்.

வள்ளுவர் கோட்டத்தில் இருந்து பெசண்ட் நகர் மின் மயானத்திற்கு காலை 10.30 மணியளவில் பாக்யராஜ் உடல் கொண்டுவரப்படும். காலை 10.45 மணி முதல் 11.45 மணிக்குள், முதல்வர் விஜய் அறிவித்தபடி அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

இயக்குநர் கே. பாக்யராஜ், இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது உடல், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, ரஜினி, கமல் உட்பட ஏராளமான திரையுலகினரும் மக்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

summary

Actor Parthiban has stated that the funeral of director Bhagyaraj will take place tomorrow morning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments