FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பசுமைப் போராளியும், மகப்பேறு மருத்துவருமான சத்தியசுந்தரி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல்

பசுமைப் போராளியும், மகப்பேறு மருத்துவருமான சத்தியசுந்தரி மறைவுக்கு திமுக தலைவர் இரங்கல் குறித்து...

பசுமைப் போராளியும், சிறந்த மகப்பேறு மருத்துவருமான சத்தியசுந்தரி அம்மா - எக்ஸ்
பகிர்:

பசுமைப் போராளியும், சிறந்த மகப்பேறு மருத்துவருமான சத்தியசுந்தரி அம்மா மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

பசுமைப் போராளியும், சிறந்த மகப்பேறு மருத்துவருமான சத்தியசுந்தரி அம்மா மறைவுச் செய்தியறிந்து மிகவும் துயருற்றேன். இயற்கையின் மடியில் மீளாத் துயில் கொள்ளும் அந்த இயற்கைப் பாதுகாவலரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement

Advertisement

1980-களில் பவானி ஆற்றைப் பாழாக்கிய விஸ்கோஸ் ஆலைக்கு எதிராக, எவ்வித மிரட்டல்களுக்கும் அஞ்சாமல் மக்களைத் திரட்டி அவர் நடத்திய சட்டப் போராட்டமும், களப் போராட்டமும் இன்றும் மக்களால் நினைவுகூரப்படுகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த சத்தியசுந்தரி அம்மாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் - உறவினர்கள் - சூழலியல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

summary

Passing of environmental activist and obstetrician Sathiyasundari...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments