முகப்பு
செய்திகள்

கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Updated On : 27 ஜூன் 2026, 12:26 pm IST
பாக்யராஜ் - கோப்புப் படம்
பகிர்:

மறைந்த திரைப்பட இயக்குநர் கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இயக்குநர் கே. பாக்யராஜ் இன்று காலை நடைப்பயிற்சி சென்றிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவரது உடல், நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின், நுங்கம்பாக்கம் இல்லத்துக்கு நேரில் வந்து மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

Advertisement

Advertisement

குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொண்டதோடு, ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம்! தமிழ் சினிமாவில் முடிசூடாத் திரைக்கதை மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அசாத்திய இயக்குநராக வலம் வந்தவர் பாக்யராஜ் என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

summary

DMK leader M.K. Stalin pays personal homage to the mortal remains of K. Bhagyaraj!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments