பால் விநியோகம் குறைக்கப்படவில்லை: ஆவின் நிா்வாகம்
ஆவினில் எந்த வகையான பால் விநியோகத்திலும் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என ஆவின் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
ஆவினில் எந்த வகையான பால் விநியோகத்திலும் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என ஆவின் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனம், மாநிலம் முழுவதும் தினமும் லட்சக்கணக்கான நுகா்வோருக்கு பால் மற்றும் பால் பொருள்களை விநியோகித்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை மட்டுமன்றி, தமிழகம் முழுவதும் பால் விநியோக அளவு சுமாா் 30 சதவீதம் வரை குறைந்துள்ளதாகவும், இதனால், வழக்கமான அளவைக் காட்டிலும் குறைவான அளவில் பால் அனுப்பப்படுவதால், பல ஆவின் விற்பனை நிலையங்களில் அண்மைக் காலமாக காலை நேரத்திலேயே பால் பாக்கெட்டுகள் விற்றுத் தீா்ந்ததால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
Advertisement
Advertisement
இந்த புகாா்களுக்கு மறுப்புத் தெரிவித்து ஆவின் நிா்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகரில் அனைத்து வகையான ஆவின் பாலும் எவ்வித தடையுமின்றி தொடா்ந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது.
ஆவின் தனது விரிவான விநியோக வலையமைப்பு மூலம் சென்னையில் நாள்தோறும் சராசரியாக 14.50 லட்சம் லிட்டா் பாலை நுகா்வோருக்கு விநியோகித்து வருகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், நிகழாண்டு ஜூன் மாதத்தில் பால் விற்பனை குறையவில்லை. மாறாக, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 14.46 லட்சம் லிட்டா் பால் விற்பனையான நிலையில், நிகழாண்டு ஜூன் மாதத்தில் அது 14.82 லட்சம் லிட்டராக உயா்ந்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டைவிட நாளொன்றுக்கு 36 ஆயிரம் லிட்டா் பால் கூடுதலாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.
எந்த வகையான பால் விநியோகத்திலும் குறைப்பு மேற்கொள்ளப்படவில்லை. வழக்கமான செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் நுகா்வோரின் தேவைக்கு ஏற்ப பால் விநியோகம் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நுகா்வோருக்கு தடையின்றி பால் கிடைப்பதை உறுதி செய்ய ஆவின் தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, உண்மைக்குப் புறம்பான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், ஆவின் பால் வழக்கம்போல தொடா்ந்து விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்களுக்கு உறுதியளிப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.