தவெக வெற்றியை விசில் அடித்துக் கொண்டாடிய நடிகர் ஜீவா!
தவெக வெற்றியை நடிகர் ஜீவா விசில் அடித்துக் கொண்டாடியது குறித்து...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்துவரும் நிலையில், நடிகர் ஜீவா விசில் அடித்துக் கொண்டாடியுள்ளார். இதன்மூலம் விஜய்யின் வெற்றியை வரவேற்பதாகவும் அவர் சைகை மூலம் சுட்டிக்கட்டியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பிற்பகல் 3.30 மணி நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 107 தொகுதிகளிலும், திமுக 72 தொகுதிகளிலும், அதிமுக 55 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கோபிசெட்டிபாளையத்தில் போட்டியிட்ட செங்கோட்டையன், சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் செங்கோட்டையன் வெற்றி பெற்றார்.
Advertisement
Advertisement
தேர்தலில் முன்னிலை வகித்துவரும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து நடிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ஜீவா விசில் அடித்து தவெக விஜய்யின் வெற்றியை கொண்டாடியுள்ளார்.
Actor Jiiva Celebrates TVK's Victory by Blowing a Whistle
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.