மதுரையைப் பின்னணியாகக் கொண்ட கதையில் ஜீவா!
ஜீவாவின் புதிய படம் குறித்து...
நடிகர் ஜீவாவின் புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் ஜீவாவுக்கு பிளாக், தலைவர் தம்பி தலைமையில் ஆகிய படங்கள் வெற்றிப்படமாக அமைந்ததால் இழந்த தன் மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க நல்ல கதையம்சமுள்ள படங்களைத் தேர்தெடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பவர் என்பதால் ஜீவாவின் படங்களின் மீது எதிர்பார்ப்பும் இருக்கும். தற்போது, கிடா படத்தின் இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் மதுரையைப் பின்னணியாகக் கொண்ட கதையில் நடிக்கவுள்ளார். இதனை, மாமன், கருடன் ஆகிய வெற்றிப்படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.
Advertisement
Advertisement
விரைவில் படப்பிடிப்பும் தொடங்கவுள்ளதால் இந்தாண்டிலேயே படம் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
An announcement regarding actor Jiiva's new film has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.