FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

நடிகர் ஜீவா நடிக்கும் தகப்பன்! படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் ஜீவாவின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது...

Updated On : 20 ஜூலை 2026, 5:54 pm IST
தகப்பன் குழுவினர்.
பகிர்:

நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்குத் தகப்பன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

நடிகர் ஜீவாவுக்கு பிளாக், தலைவர் தம்பி தலைமையில் ஆகிய படங்கள் வெற்றிப்படமாக அமைந்ததால் இழந்த தன் மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க நல்ல கதையம்சமுள்ள படங்களைத் தேர்தெடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பவர் என்பதால் ஜீவாவின் படங்களின் மீது எதிர்பார்ப்பும் இருக்கும். தற்போது, கிடா படத்தின் இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் மதுரையைப் பின்னணியாகக் கொண்ட கதையில் நடிக்கவுள்ளார்.

Advertisement

Advertisement

இதனை, மாமன், கருடன் ஆகிய வெற்றிப்படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியுள்ளது. படத்திற்கு, தகப்பன் எனப் பெயரிட்டுள்ளனர்.

The new film starring actor Jiiva has been titled 'Thagappan'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments