மேளா - நடிகர் மம்மூட்டியின் புதிய திரைப்படம்!
நடிகர் மம்மூட்டி நடித்துவரும் திரைப்படத்தின் பெயர் அறிவிப்பு....
நடிகர் மம்மூட்டி நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் பெயர் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்தியளவில் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான மம்மூட்டி தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதுடன் கதையம்சமுள்ள படங்களைத் தயாரித்தும் வருகிறார். இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான களம்காவல் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக வெற்றியைப் பெற்றது.
பின், நடிகர் மோகன்லாலுடன் இணைந்து நடித்த பேட்ரியாட் சுமாரான விமர்சனங்களையே பெற்றதால் பெரிதாக வெற்றியைப் பெறவில்லை. தற்போது, மட்டஞ்சேரி மாஃபியா என்கிற திரைப்படத்திலும் தனுஷ் - 55 படத்திலும் நடித்து வருகிறார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மம்மூட்டியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரே தயாரித்து நடித்துவரும் புதிய திரைப்படத்திற்கு மேளா எனப் பெயரிட்டுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை நிதிஷ் சகதேவ் இயக்குகிறார். விஷ்ணு விஜய் இசையமைக்கிறார்.
ஏற்கனவே, நடிகர் மம்மூட்டி 1980 ஆம் ஆண்டு மேளா என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
The title poster of the new film starring Mammootty has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.