
ரவி மோகன் படத்தின் மூலம் இசையமைப்பாளராகும் கெனிஷா!
கெனிஷா இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்...

ரவி மோகன் இயக்குநராகும் திரைப்படத்தின் இசையமைப்பாளராக கெனிஷா அறிவிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் ரவி மோகன் நடித்த கராத்தே பாபு திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து ப்ரோ கோட், பென்ஸ் ஆகிய திரைப்படங்களில் நடிப்பதுடன், இயக்குநராக ஆன் ஆர்டினரி மேன் (An ordinary man) என்கிற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இதில் நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்க, ரவி மோகனே தயாரிக்கவும் செய்கிறார்.

இந்த நிலையில், ரவி மோகன் இயக்கும் ஆன் ஆர்டினரி மேன் திரைப்படத்திற்கு கெனிஷா இசையமைக்க உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேற்கத்திய இசை பாணியில் தன் பாடல்களைப் பாடிய கவனம் பெற்றவரான கெனிஷா முதல்முறையாக இசையமைக்க உள்ளதால் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
Kenisha has been announced as the music composer for the film that Ravi Mohan is directing.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







