போட்டியிட்ட 27 இடங்களில் 3-ல் மட்டும் பாஜக முன்னிலை!
அதிமுக கூட்டணியில் 27 இடங்களில் போட்டியிட்ட பாஜக 3 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
அதிமுக கோட்டையாக கருதப்படும் கோவை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து வருகிறது. அங்கு அதிமுக பின்னடைவில் உள்ளது.
அதிமுக கூட்டணியில் 27 இடங்களில் போட்டியிட்ட பாஜக 3 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.
Advertisement
Advertisement
தளி தொகுதியில் நாகேஷ் குமார், உதகமண்டலத்தில் போஜராஜன், நாகர்கோவிலில் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்து வருகின்றனர்.
நட்சத்திர வேட்பாளராக கருதப்படும் தமிழிசை செளந்தராஜன் மைலாப்பூர் தொகுதியில் பின்னடைவில் உள்ளார். விஜயதாரணி விளவங்கோடு தொகுதியில் பின்னடைவில் உள்ளார்.
வானதி சீனிவாசன் கோவை வடக்கில் பின்னடைவில் உள்ளார். அவினாசி தொகுதியில் எல். முருகன் பின்னடைவில் இருக்கிறார்.