தமிழக வரலாற்றில் புதிய கட்சியான தவெக 115 இடங்களில் முன்னிலை!
தமிழக வரலாற்றில் புதியதாக அரசிய கட்சி தொடங்கி பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட நடிகர் விஜய் தவெக கட்சி முன்னிலை வகித்து வருவது...
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தவெக 115 இடங்களில் முன்னிலை வகித்து வருவதை தொடர்ந்து, தமிழக வரலாற்றில் புதியதாக அரசிய கட்சி தொடங்கி பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட நடிகர் விஜய் தவெக கட்சி முன்னிலை வகித்து வருவது இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தமிழகத்தில் 17-ஆவது சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழகத்தில் முதல் முறையாக 85 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
இந்த நிலையில், தேர்தலில் பதிவாக வாக்குகள் எண்ணிக்கை திங்கள் காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதைத்தொடர்ந்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு சுற்று வாரியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
திமுக கூட்டணி 55 இடங்களிலும், அதிமுக கூட்டணி 68 இடங்களிலும், தவெக 115 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. நாம் தமிழர் கட்சிக்கு ஒரு இடத்தில் கூட முன்னிலை இல்லை.
திமுக கூட்டணியில் திமுக 37 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், தேமுதிக 2 இடங்களிலும் , விசிக 2 இடங்களிலும், கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும் மார்க்சிஸ்ட் கட்சி 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
அது போல் அதிமுக கூட்டணியை பொருத்தமட்டில் அதிமுக 67 இடங்களிலும் பாஜக 1 இடங்களிலும் பாமக 7 இடங்களிலும், அமமுக ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது.
தவெகவை பொருத்தமட்டில் 115 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
தமிழகத்தின் முதல்வர் வேட்பாளர்களாக தற்போதைய முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.
அதிமுக 167 இடங்களிலும், திமுக 164 இடங்களிலும், பாஜக 27 இடங்களிலும், காங்கிரஸ் 28 இடங்களிலும் போட்டியிடுகின்றன. அதுபோல் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து களம் இறங்கியது. தவெக 234 தொகுதிகளும் தனித்து களம் இறங்கிய நிலையில், எடப்பாடி தொகுதி வேட்பாளரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதால் 233 தொகுதிகளில் போட்டியிட்டது.
இந்த தேர்தலில் மொத்தம் 4.61 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியிருந்தது. இதில் 2.88 லட்சம் வாக்குகள் தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுடையது. 85 வயதுக்கும் மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் என 1.73 லட்சம் பேர் வாக்களித்தனர், 1.10 லட்சம் அலுவலர்கள் வாக்குச்சாவடிகளில் நேரடியாக வாக்களித்துள்ளனர். தபால் வாக்குகளின் வெற்றி நிலவரங்கள், வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான இறுதிச் சுற்றுக்கு முன்னர் தெரியவரும்.
The new party in Tamil Nadu history, the TVK, is leading in 115 seats
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.