கூட்டணிவாரியாக தமிழ்நாட்டில் முன்னிலை நிலவரம்!
கூட்டணிவாரியாக தமிழ்நாட்டில் முன்னிலை நிலவரம் வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், கூட்டணிவாரியாக முன்னிலை நிலவரம் வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாட்டில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பகல் 11.30 மணி நிலவரப்படி, கூட்டணிவாரியாக நிலவரங்கள் வெளியாகியுள்ளன.
தனித்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் 104 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
Advertisement
அடுத்த இடத்தில் அதிமுக கூட்டணி 76 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட பாமக 18 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் தற்போது 6 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாஜக 3 தொகுதிகளிலும், அமமுக ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளது.
திமுக வட்டணி 50 இடங்களில் முன்னிலை பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது.
திமுக 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் தலா 2 தொகுதிகளிலும் தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலா 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளன.