விஜய்யுடன் அமைச்சரவையும் பதவியேற்குமா? யார் யார் இடம்பெறுவர்?
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்கும்போது அமைச்சரவையும் அவருடன் பதவியேற்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் நிலையில், ஒரு சில நாள்களில் தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது. அவருடன் அமைச்சரவையும் பதவியேற்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்க விருக்கும் நிலையில், நாளை அவர் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவார் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே, ஆளுநருக்கு மின்னஞ்சல் மூலம் தவெக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில், இரண்டு வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிப்பதாகவும் விஜய் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், விஜய் முதல்வராக பதவியேற்கும்போதே அவரது அமைச்சரவையும் பதவியேற்குமா அல்லது வேறொரு நாளில் பதவியேற்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இன்று அமைச்சரவையில் இடம்பெறுவோர் குறித்து விஜய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், விஜய் தலைமையிலான அமைச்சரவையில் தவெக பொதுச் செயலர் ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோருக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுபோல, பெண் உறுப்பினர்களான திருப்பூர் சத்யபாமா, விஜயலட்சுமி உள்ளிட்டோருக்கும் வாய்ப்புகள் வழங்கப்படலாம் என்றும் அருண்ராஜ், விஜய் சரவணன், தமிழன் பார்த்திபன், முகமது பர்வேஸ், கல்லாண் உள்ளிட்டோரும் அமைச்சரவையும் இடம்பெற வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எதுவுமே கட்சித் தலைமை அல்லது கட்சி நிர்வாகத்தின் மூலம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.