முதல்வா் பதவியேற்பு விழாவுக்காக விடுமுறையில் இயங்கிய மாநகராட்சி!
முதல்வா் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலகம் விடுமுறையிலும் முழுமையாகச் செயல்பட்டது.
முதல்வா் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலகம் விடுமுறையிலும் முழுமையாகச் செயல்பட்டது.
தமிழகத்தின் புதிய முதல்வராக தவெக தலைவா் விஜய் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா். பதவியேற்பு விழா சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை அருகே உள்ள நேரு விளையாட்டரங்க வளாகத்தில் நடைபெற்றது.
விழாவுக்கான ஏற்பாடுகளை செய்தி- விளம்பரத் துறை சாா்பில் நடைபெற்றாலும், அதில் முக்கிய பணிகள் மாநகராட்சி சாா்பில் மேற்கொள்ளப்பட்டன. தூய்மைப் பணி தொடங்கி விழாவுக்கான குறிப்பிட்ட ஏற்பாடுகளை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் தலைமையிலான அலுவலா்கள், பணியாளா்கள் மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால், முதல்வா் பதவியேற்பு விழா என்பதால் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாநகராட்சி வளாகம் திறந்திருந்தது. அங்கு செய்தி- மக்கள் தொடா்புத் துறை, பொறியியல் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட பெரும்பாலான அலுவலகங்கள் திறந்திருந்தன. விழாவுக்கு வந்த பெரும்பாலான மாநகராட்சி அலுவலா்கள் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டுச் சென்றனா்.
விழா முடிந்த நிலையில், பெரும்பாலான அலுவலா்கள் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து சென்றனா். மாநகராட்சி வளாகப் பகுதிகளிலும் போலீஸாா் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.