முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாட்டின் மூத்த, இளம் எம்.எல்.ஏ.க்கள் யார் எவர்?

தமிழ்நாட்டின் மூத்த, இளம் எம்.எல்.ஏ.க்கள் பற்றி...

சபரி ஐயங்கரன், கமலி, போஜராஜன் - கோப்புப்படம்
பகிர்:

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மிக இளம் வயது எம்.எல்.ஏ.க்களாக இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று பதவியேற்றுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பெரியகுளம் எம்.எல்.ஏ. சபரி ஐயங்கரன் மற்றும் அவினாசி எம்.எல்.ஏ. கமலி ஆகிய இருவரும் 28 வயதில் வெற்றி பெற்று இளம் உறுப்பினர்களாகி உள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மிக மூத்த உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த உதகை எம்.எல்.ஏ. போஜராஜன், 79 வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

மேலும், தவெக சார்பில் போட்டியிட்டு சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்ற 30 வயது கீர்த்தனா, மிக இளம் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். மொத்தம் 23 பெண்கள் தமிழ்நாட்டு சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 49 (21%) பேர் 25 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள். 123 (53%) வேட்பாளர்கள் 41 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், 61 (26%) வேட்பாளர்கள் 61 முதல் 80 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 85 (36%) பேர் தங்கள் கல்வித் தகுதி 5-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை என்றும் 139 (60%) பேர் பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் படித்துள்ளதாகவும், 9 பேர் பட்டயப் படிப்பு (டிப்ளமோ) முடித்துள்ளதாகவும் அவர்கள் தாக்கல் செய்த சுய பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளனர்.

summary

Who are Tamil Nadu's oldest and youngest MLAs?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments