முகப்பு
தமிழ்நாடு

சென்னை - திருப்பதி விரைவு ரயில்கள் ஜூனில் 2 நாள்கள் முழுமையாக ரத்து

சென்னை-திருப்பதி இடையேயான விரைவு ரயில்கள் வரும் ஜூன் 19, 21 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மண்டலம் சாா்பில் அறிவிப்பு

Updated On : 13 மே 2026, 1:15 am IST
ரயில் - பிரதிப் படம்
பகிர்:

சென்னை-திருப்பதி இடையேயான விரைவு ரயில்கள் வரும் ஜூன் 19, 21 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மண்டலம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: அரக்கோணம் நிலைய பணிமனையில் தண்டவாள தொழில்நுட்பப் பணிகள் வரும் 26- ஆம் தேதி முதல் ஜூன் 21- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதையடுத்து, சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் சில விரைவு ரயில்கள் குறிப்பிட்ட நாள்களில் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

அதன்படி, வரும் ஜூன் 19- ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 2.25 மணிக்கு புறப்படும் சப்தகிரி விரைவு ரயில் (எண் 16053) மற்றும் அன்று மாலை 4.35 மணிக்குப் புறப்பட்டு திருப்பதி செல்லும் விரைவு ரயில் (எண் 16203) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

Advertisement

மறுமாா்க்கத்தில் திருப்பதியிலிருந்து வரும் ஜூன் 19 -ஆம் தேதி காலை 6.30 மணிக்கு புறப்படும் சப்தகிரி விரைவு ரயில் (எண் 16203), காலை 10.10 மணிக்குப் புறப்பட்டு சென்னைக்கு வரும் விரைவு ரயில் (எண் 16054) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

திருப்பதியிலிருந்து வரும் ஜூன் 21- ஆம் தேதி காலை 10.10 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் சப்தகிரி விரைவு ரயிலும் (எண் 16054) ரத்து செய்யப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.