பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!
விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி இயக்கப்படவுள்ளது குறித்து...
விழுப்புரம்: தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், விழுப்புரம் வழியாக செல்லும் பல்வேறு ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஆர். வினோத் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக இடைப்பட்ட ரயில் நிலையத்தில் ரயில்கள் நிறுத்தி இயக்கம், காலதாமதமாக புறப்படுதல் போன்ற நடைமுறைகள் செயல்படுத்தப்படவுள்ளன.
Advertisement
Advertisement
இடைப்பட்ட ரயில்நிலையத்தில் நிறுத்தம் : குருவாயூரிலிருந்து இரவு 11.15 மணிக்குப் புறப்படும் குருவாயூர்-சென்னை எழும்பூர் விரைவு ரயில் (வண்டி எண் 16128), ஜூன் 24 ஆம் தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 30 நிமிஷங்களும், ஜூன் 25,26,27ஆம் தேதிகளில் சுமார் 25 நிமிஷங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இயக்கப்படும்.
கன்னியாகுமரியிலிருந்து காலை 5.50 மணிக்குப் புறப்படும் கன்னியாகுமரி-ஹவுரா அதிவேக விரைவு ரயில் (வண்டிஎண் 12666) ஜூன் 27-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 30 நிமிஷங்களும், நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து காலை 6.15 மணிக்குப் புறப்படும் நாகர்கோவில் - மும்பை லோக்மான்ய திலக் விரைவு ரயில் (வண்டி எண் 16352) ஜூன் 25-ஆம் தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 45 நிமிஷங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இயக்கப்படும்.
இதுபோன்று தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து காலை 7.40 மணிக்குப் புறப்படும் தூத்துக்குடி-கச்சிக்குடா விரைவு ரயில் (வண்டி எண் 17616), ஜூன் 24 ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 55 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்படும். மதுரையிலிருந்து பிற்பகல் 12.10 மணிக்குப் புறப்படும் மதுரை- பிகானேர் அனுவரத் அதிவேக விரைவு ரயில் (வண்டி எண் 22631), ஜூன் 25-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 15 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இயக்கப்படும்.
ஜோத்பூரிலிருந்து மாலை 4.50 மணிக்குப் புறப்படும் ஜோத்பூர்- மன்னார்குடி விரைவு ரயில் ( வண்டி எண் 22673), ஜூன் 24, 27 ஆகிய தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 60 நிமிஷங்களும், சென்னை எழும்பூரிலிருந்து காலை 10.40 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயில் (வண்டி எண் 16127), ஜூன் 24,27 ஆகிய தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 20 நிமிஷங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இயக்கப்படும்.
தாமதமாக இயக்கம்: திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.35 மணிக்குப் புறப்பட வேண்டிய திருச்சி - ஹவுரா அதிவேக விரைவு ரயில் (வண்டி எண்12664), ஜூன் 26 -ஆம் தேதி சுமார் 45 நிமிஷங்கள் தாமதமாக பிற்பகல் 2.20 மணிக்குப் புறப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Due to engineering works being carried out in areas falling under the Tiruchirappalli Division of Southern Railway, various trains passing through Villupuram will be operated with regulated stops.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.