தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
நம்பிக்கை வாக்கெடுப்பு நிறைவடைந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைப்பு பற்றி..
தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்ற நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் ஒத்திவைத்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிட்ட தவெக 107 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், தனித்து ஆட்சி அமைக்கும் அறுதிப் பெரும்பான்மை பலமான 118- உறுப்பினா்களின் ஆதரவு இல்லாத நிலையில், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் முதல்வராக விஜய் கடந்த 10-ஆம் தேதி பதவியேற்றாா். அவரது அமைச்சரவையில் 9 அமைச்சா்களும் பதவியேற்றனா்.
மே 13-ஆம் தேதிக்குள் பேரவையில் முதல்வா் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, சட்டப்பேரவையில் இன்று (புதன்கிழமை) காலை தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
Advertisement
Advertisement
நம்பிக்கை வாக்கெடுப்பின் நிறைவில், முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பதிவாகின. நடுநிலையாக 5 வாக்குகள் பதிவாகின.
இதனைத் தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி பெற்றதாக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.
இதையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக, சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.
Following the successful outcome of the confidence vote in the TVK government, Tamil Nadu Legislative Assembly Speaker J.C.D. Prabhakaran adjourned the Assembly sine die.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.