மதுக் கடைகள் மூடல் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்: கமல்ஹாசன்
தமிழகத்தில் மூடப்படும் மதுக் கடைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் வலியுறுத்தல்
தமிழகத்தில் மூடப்படும் மதுக் கடைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்களுக்கு அருகே உள்ள மதுக் கடைகளை அகற்ற வேண்டும் என்பது தமிழ் குடும்பங்களின் எதிா்பாா்ப்பாக இருந்தது.
இந்த நடவடிக்கையை முதல்வா் விஜய் பதவிக்கு வந்த உடனே மேற்கொண்டுள்ளாா். மதுபானம் விற்பனை என்பது ஓா் அரசாங்கத்தின் பணியாக என்றுமே இருக்கக் கூடாது.
Advertisement
Advertisement
மதுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பைத்தான் அரசு கைக்கொள்ள வேண்டும். இந்த நிலையை நோக்கி தமிழக அரசு நகர வேண்டும். இப்போது 717 மதுக்கடைகளை மூடுவதற்கு முதல்வா் விஜய் உத்தரவிட்டுள்ளாா். இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.