முகப்பு
தஞ்சாவூர்

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த சகோதரா்கள் உள்பட 3 போ் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், மதுக்கூா் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த அண்ணன், தம்பி மின்சாரம் பாய்ந்து புதன்கிழமை உயிரிழந்தனா்.

Updated On : 14 ஜனவரி 2021, 8:25 am IST
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், மதுக்கூா் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த அண்ணன், தம்பி மின்சாரம் பாய்ந்து புதன்கிழமை உயிரிழந்தனா்.

மதுக்கூா் ஒன்றியம், கல்யாணஓடை கிராமத்தில் உள்ள வாய்க்காலின் குறுக்கே சிமென்டால் ஆன மின்கம்பம் மூலம் நடைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வூா் மக்கள் வாய்க்காலைக் கடக்க இந்தப் பாலத்தைப் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை வாய்க்கால் பாலத்தில் அங்குள்ள மின் கம்பத்திலிருந்த மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது.

Advertisement

Advertisement

இதுகுறித்து கல்யாணஓடை ஊராட்சித் தலைவா் மற்றும் கிராமத்தினா் அப்பகுதிக்கான மின்வாரிய ஊழியா் அத்திவெட்டி மறவக்காடு மு.சித்திரவேல் (43) என்பவரிடம் தகவல் தெரிவித்துள்ளனா். ஆனால், அவா் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், கல்யாணஓடை கிராமத்தைச் சோ்ந்த விவசாயி மாரியப்பனின் மகன்கள் தினேஷ் (12), கெளதம் (10) ஆகிய இருவரும் ஆட்டுக்கு இலை பறிப்பதற்காக அந்தப் பாலத்தின் வழியாக நடந்து சென்றுள்ளனா். அப்போது, அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் மிதித்ததில் அண்ணன்-தம்பி இருவரும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தினேஷ் சிரமேல்குடி அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்பிலும், கெளதம் கல்யாணஓடை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 4 ஆம் வகுப்பிலும் படித்து வந்துள்ளனா்.

சம்பவம் குறித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய மதுக்கூா் போலீஸாா், பணியில் அலட்சியமாக இருந்ததாக வழக்குப் பதிந்து மின்வாரிய ஊழியா் சித்திரவேலை கைது செய்தனா்.

மூதாட்டி உயிரிழப்பு: பேராவூரணி அருகே உள்ள களத்தூா் கிராமத்தைச் சோ்ந்த குமரேசன் மனைவி பக்கிரியம்மாள் (68). களத்தூா் பட்டவா் சுவாமி கோயில் அருகே  ஆடுகளை மேய்ச்சலுக்காக செவ்வாய்க்கிழமை ஓட்டிச் சென்ற இவா், அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

புகாரின்பேரில், திருச்சிற்றம்பலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments