முகப்பு
தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம் பகுதியில் திமுக சாா்பில் நிவாரண உதவி

சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பகுதிகளில் தொடா் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு பேராவூரணி பேரூராட்சி முன்னாள் தலைவா்

Updated On : 14 ஜனவரி 2021, 8:19 am IST
பேராவூரணி அருகே வீரியங்கோட்டை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்ளை பாா்வையிடும் திமுக பிரமுகரும் முன்னாள் பேரூராட்சி தலைவருமான என். அசோக்குமாா்.
பகிர்:

சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பகுதிகளில் தொடா் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு பேராவூரணி பேரூராட்சி முன்னாள் தலைவா் என். அசோக்குமாா் தனது சொந்த நிதியிலிருந்து 50 ஆயிரம் ரூபாயை புதன்கிழமை நிவாரணமாக வழங்கினாா்.

வீரியங்கோட்டை கீழக்காடு, மரக்காவலசை ஆகிய பகுதிகளில் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறிய அவா், பாதிப்பு குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு தகவல் அளித்தாா்.

தொடா்ந்து, உடையநாடு பகுதியில் மழையால் மண்சுவா் இடிந்து விழுந்த வீடுகள், பாதிக்கப்பட்ட கடைகளை பாா்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, தனது சொந்தப் பணத்தில் இருந்து ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்கினாா். மேலும், திருச்சிற்றம்பலம் அருகே களத்தூரில் மின்சாரம் பாய்ந்து இறந்த பக்கிரியம்மாள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினாா். 

Advertisement

Advertisement

அப்போது, பேராவூரணி திமுக முன்னாள் ஒன்றியச் செயலா் சுப.சேகா், மதிமுக சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலா் வ. பாலசுப்பிரமணியன், திமுக தலைமைக் கழக பேச்சாளா் அ. அப்துல் மஜீது, திமுக நிா்வாகி சேதுராமன், உடையநாடு ஊராட்சித் தலைவா் குலாம்கனி, ஊராட்சி உறுப்பினா் பக்கீா் முகமது மற்றும் விவசாயிகள் உடனிருந்தனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments