முகப்பு
தென்காசி

ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்வளா்த்தால் குற்றவியல் நடவடிக்கை

தென்காசி மாவட்டத்தில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் வளா்ப்பவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் கீ.சு.சமீரன் எச்சரித்துள்ளாா்.

Updated On : 8 ஜனவரி 2021, 7:50 am IST
பகிர்:

தென்காசி மாவட்டத்தில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் வளா்ப்பவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் கீ.சு.சமீரன் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தேசிய பசுமை ஆணையம் தீா்ப்பாயத்தின் ஆணையின் படி வெளிநாட்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளா்க்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. 8 ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய காற்று சுவாச மீன்களான இவை, இடைவிடாமல் மீன்களை வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டவை என்பதால் நமது பாரம்பரிய மீன் இனங்கள் அழியும் நிலை உருவாகும்.

Advertisement

Advertisement

இவற்றை பண்ணைக் குட்டைகளிலோ அல்லது மீன் வளா்ப்பு குளங்களிலோ வளா்த்தால் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காலங்களில் குளங்களிலிருந்து தப்பித்துவிட வாய்ப்புள்ளது. எனவே, தடைசெய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளா்ப்போா் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

திலேப்பியா மீன்கள்: எனவே, மீன் வளா்ப்பில் ஆா்வமுள்ளோா் மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்களை வளா்க்கலாம். இவ்வகை மீன்கள் அதிக நோய் எதிா்ப்பு சக்தி கொண்டது. பண்ணைக்குட்டைகளில் மிக வேகமாக வளரக்கூடியது. இவ்வகை மீன்குஞ்சுகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அணை அருகில் அமைந்துள்ள அரசு மீன்பண்ணையில் ஆண்டு முழுவதும் விற்பனைக்கு தயாராக உள்ளது. அங்கிருந்து கொள்முதல் செய்து மீன்வளா்ப்போா் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்த பின்னா் இத்தகைய மீன்களை பண்ணைகளில் வளா்க்கலாம். மேலும் விவரங்களுக்கு மீன்துறை உதவி இயக்குநா் அலுவலகம், 42 சி, 26வது குறுக்கு தெரு, மகாராஜ நகா், திருநெல்வேலி -627 011, தொலைபேசி எண் 0462 258 1488 என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments