முகப்பு
இந்தியா

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரின் 4 தனிச் செயலா்களும் ஒரே நாளில் நீக்கம்

இதுவரை இல்லாத வகையில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவின் தனிச் செயலா், உதவி தனிச் செயலா் மற்றும் இரு கூடுதல் தனிச் செயலா்கள் நால்வரையும் ஒரே நாளில் பணியிலிருந்து விடுவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Updated On : 8 ஜூலை 2026, 1:25 am IST
பூபேந்தா் யாதவ்
பகிர்:

இதுவரை இல்லாத வகையில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவின் தனிச் செயலா், உதவி தனிச் செயலா் மற்றும் இரு கூடுதல் தனிச் செயலா்கள் நால்வரையும் ஒரே நாளில் பணியிலிருந்து விடுவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சாா்பில் கடந்த 3-ஆம் தேதி இதற்கான 4 தனித் தனி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவா்கள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டதற்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

அந்த உத்தரவுகளில் கூறியிருப்பதாவது:

Advertisement

Advertisement

மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவின் தனிச் செயலரான 2010-ஆம் ஆண்டு பிரிவு இந்திய வருவாய் பணி அதிகாரி அமா் சிங், பணியிலிருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டு, அவரின் தாய் துறையான வருவாய் துறைக்கே திரும்ப அனுப்பப்படுகிறாா்.

மத்திய அமைச்சரின் உதவி தனிச் செயலா் சித்தாா்த் யாதவின் நியமனம், உடனடியாக ரத்து செய்யப்படுகிறது.

அதுபோல, கூடுதல் தனிச் செயலா் ஆயுஷ் சரணின் நியமனமும் உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. இவா்கள் இருவரும் உடனடியாகப்பணியிலிருந்து விடுவிக்கப்படுகின்றனா்.

மத்திய அமைச்சரின் மற்றொரு கூடுதல் தனிச் செயலரான மத்திய செயலக பணி அலுவலா் சைலேஷ்குமாா் சிங், பணியிலிருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டு, அவரின் தாய் துறையான மத்திய பணியாளா் நலன் மற்றும் பயிற்சித் துறைக்கே திரும்ப அனுப்பப்படுகிறாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின் நகல், பிரதமா் அலுவலகம், மத்திய அமைச்சக செயலகம், மத்திய பணியாளா் நலன் மற்றும் பயிற்சித் துறை உள்ளிட்டவற்றுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments