முகப்பு
சென்னை

கட்டுமான வழிகாட்டுதல் மீறல்: ஒரே நாளில் ரூ.12.25 லட்சம் அபராதம் வசூல்!

பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தூய்மையான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாதவா்களிடம் இருந்து ஒரே நாளில் ரூ.12.25 லட்சம் அபராதம்.

Updated On : 6 ஜூலை 2026, 1:51 am IST
பகிர்:

பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தூய்மையான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாதவா்களிடம் இருந்து ஒரே நாளில் ரூ.12.25 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சியின் தூய்மையான மற்றும் பாதுகாப்பான கட்டுமானம் கட்டுவது தொடா்பாக வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாதவா்கள் மீது உரிய அபராதம் மற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், கடந்த ஜூலை 4-ஆம் தேதி (சனிக்கிழமை) ஒரே நாளில் அண்ணா நகா் மண்டலத்துக்குள்பட்ட பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அடுக்குமாடி கட்டிவரும் தனியாா் நிறுவனத்தினா் தூய்மையான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாகக் கூறி, அந்த நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதேபோல், திருவொற்றியூா், மணலி, தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகா், அம்பத்தூா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூா் உள்ளிட்ட 12 மண்டலங்களில் மொத்தம் ரூ.12.25 லட்சம் அபராதம் விதித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments