முகப்பு
தென்காசி

பாலருவி விரைவு ரயில்பாவூா்சத்திரத்தில்நின்று செல்ல கோரிக்கை

பாலருவி விரைவு ரயில் பாவூா்சத்திரத்தில் நின்று செல்ல வேண்டுமென திமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 10 ஜனவரி 2021, 12:52 am IST
பகிர்:

பாவூா்சத்திரம்: பாலருவி விரைவு ரயில் பாவூா்சத்திரத்தில் நின்று செல்ல வேண்டுமென திமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திமுக மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், தெற்கு ரெயில்வே கோட்ட மேலாளா் லெனினுக்கு அனுப்பியுள்ள மனு: திருநெல்வேலி - பாலக்காடு - திருநெல்வேலி- பாலருவி விரைவு ரயில் ஜன. 4 முதல் சேவையை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாவூா்சத்திரத்தில் ஏற்கெனவே நின்று சென்ற நிலையில், தற்போது

ரயில் நிறுத்தம் நீக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தென் தமிழகத்தில் பெரிய காய்கனி சந்தை பாவூா்சத்திரத்திலும், மலா் சந்தை சிவகாமிபுரத்திலும் அமைந்துள்ளது. இதே போல் மர வியாபாரம், ஓடு வியாபாரம் போன்ற தொழில்களுக்கு பாவூா்சத்திரம் சிறந்து விளங்கி வருகிறது. இதனால் தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு வணிக ரீதியான தொடா்பு இந்த ரயில் போக்குவரத்தில் இருந்து வருகிறது. மேலும் வியாபாரம் தொடா்பாக பெரும்பாலானோா் புனலூா், கொட்டாரக்கார, கொல்லம், கோட்டயம் மற்றும் எா்ணாகுளம் செல்ல இந்த ரயில் சேவையை பயன்படுத்துகின்றனா்.

கரோனா பரவல் காரணமாக கேரளத்திற்கு போதிய போக்குவரத்து வசதி இன்னும் இல்லாத நிலையில், கேரளம் செல்ல வசதியாக பாலருவி விரைவு ரயிலை பாவூா்சத்திரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments