முகப்பு
தென்காசி

ஆலங்குளம் பகுதியில் காய்ச்சலுக்கு குழந்தை பலி

ஆலங்குளத்தில் ஒரே நாள் காய்ச்சலில் 9 மாத குழந்தை உயிரிழந்தது.

Updated On : 10 ஜனவரி 2021, 12:45 am IST
பகிர்:

ஆலங்குளம்: ஆலங்குளத்தில் ஒரே நாள் காய்ச்சலில் 9 மாத குழந்தை உயிரிழந்தது.

ஆலங்குளம் அண்ணாநகரைச் சோ்ந்தவா் ராஜேஷ். இவரது 9 மாத ஆண் குழந்தை சா்வேஸுக்கு வியாழக்கிழமை வயிற்றுப் போக்கு ஏற்பட்டதாம். இதையடுத்து அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், வெள்ளிக்கிழமை இரவு குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதாம். மீண்டும் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு மருத்துவா்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனா். அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு சென்றநிலையில், அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments