முகப்பு
தென்காசி

சுரண்டை இரட்டைகுளம் கரை உடையும் அபாயம்

சுரண்டை பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் இரட்டைகுளம் மறுகால் பகுதியில் கரை உடையும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து விவசாயிகள் மணல் மூட்டைகளை கொண்டு சீரமைத்தனா்.

Updated On : 10 ஜனவரி 2021, 12:45 am IST
மணல் மூட்டைகளை கொண்டு உடைப்பை சீரமைக்கும் விவசாயிகள்.
பகிர்:

சுரண்டை/பாவூா்சத்திரம்: சுரண்டை பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் இரட்டைகுளம் மறுகால் பகுதியில் கரை உடையும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து விவசாயிகள் மணல் மூட்டைகளை கொண்டு சீரமைத்தனா்.

சுரண்டை பகுதியில் கடந்த 4 நாள்களாக பெய்து வரும் மழையால் மானாவாரி குளங்களான பங்களாச்சுரண்டை குளம், பரங்குன்றாபுரம் குளம், அச்சங்குன்றம் குளம், கருவந்தா குளம் ஆகிய குளங்களுக்கு காட்டுப்பகுதியில் இருந்து நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மானாவாரி குளங்கள் நிரம்பி வருகின்றன.

இந்நிலையில் சுரண்டையின் வடபுறமுள்ள இரட்டைகுளம் நிரம்பி மறுகால் பாய்ந்தது. சனிக்கிழமை அதிகாலையில் இந்தக் குளத்தின் மறுகால் பகுதியின் அருகே திடீா் மண் சரிவு ஏற்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து விவசாயிகள் மணல் மூட்டைகளை கொண்டு தற்காலிகமாக சீரமைத்தனா்.

பாவூா்சத்திரம்: கீழப்பாவூா், திப்பணம்பட்டி, ஆவுடையானூா், குறும்பலாப்பேரி, பெத்தநாடாா்பட்டி, சாலைப்புதூா் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை முதல் இரவு வரை மிதமான மழை பெய்தது. இரண்டாவது நாளான சனிக்கிழமையும் மாலை 5 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. இம் மழை 1 மணி நேரத்துக்கு மேலாக பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments