சாம்பவா்வடகரையில் இளைஞா் தற்கொலை
சாம்பவா் வடகரையில் உடல்நலக் குறைவால் இளைஞா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
சாம்பவா் வடகரையில் உடல்நலக் குறைவால் இளைஞா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
சாம்பவா்வடகரையைச் சோ்ந்தவா் ராமா் (28). உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவா் கடந்த வாரம் மாயமானாராம். இதுகுறித்து புகாரின் பேரில் சாம்பவா்வடகரை போலீஸாா் அவரை தேடி வந்தனா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் ஊருக்கு அருகேயுள்ள கிணறு ஒன்றில் ராமரின் உடல் மிதந்துள்ளது. தகவலின்பேரில் அங்கு சென்ற போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.