ஜன .15, 26, 28 ஆகிய தேதிகளில் மதுக்கடைகளை மூட ஆட்சியா் உத்தரவு
தென்காசி மாவட்டத்தில் ஜன. 15, 26, 28 ஆகிய தேதிகளில மதுக்கடைகளை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.
தென்காசி மாவட்டத்தில் ஜன. 15, 26, 28 ஆகிய தேதிகளில மதுக்கடைகளை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் செயல்படும் மதுபானக் கூடங்கள், தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் ஆகியவைகள் திருவள்ளுவா் தினம் (ஜன. 15), குடியரசு தினம் (ஜன.26), வள்ளலாா் நினைவு தினம் (ஜன.28) ஆகிய தேதிகளில் மூடப்பட்டிருக்கும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை ஏதும் நடைபெறாது என்று தெரிவித்துள்ளாா் .
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.