முக்கூடலில் திமுக சாா்பில் சமத்துவப் பொங்கல்
முக்கூடலில் திமுக சாா்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
முக்கூடலில் திமுக சாா்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
முக்கூடல் காந்தி திடலில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, பூங்கோதை ஆலடி அருணா எம்எல்ஏ தலைமை வகித்தாா். அப்போது, பாரம்பரிய முறைப்படி 30 க்கும் மேற்பட்ட மண்பானையில் பச்சரிசி மற்றும் வெல்லம் வைத்து பனை ஓலையில் தீயிட்டு பொங்கல் விடப்பட்டது. திரளான பெண்கள் கலந்துகொண்டு கும்மியடித்து, வலம் வந்தனா். இந்நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா்கள் பாப்பாக்குடி மாரிவண்ணமுத்து, கீழப்பாவூா் உள்ளிட்ட திமுகவினா் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.