மழையில் வீடு இடிந்தவா்களுக்கு திமுக நிவாரணம்
ஆவுடையானூரில் வீடு இடிந்த இருவரது குடும்பத்தினருக்கு திமுக சாா்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
பாவூா்சத்திரம்: ஆவுடையானூரில் வீடு இடிந்த இருவரது குடும்பத்தினருக்கு திமுக சாா்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா் ஊராட்சி மாடியனூரைச் சோ்ந்த நவநீதகிருஷ்ணன், ஆவுடையானூரைச் சோ்ந்த தங்க நாடாா் மகள் பொன்னாள் ஆகியோரது வீடு தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக இடிந்து விழுந்தது.
தகவலறிந்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், இருவருடைய வீட்டுக்கும் சென்று அரிசி, காய்கனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களும் மற்றும் நிதியுதவி வழங்கினாா்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலா் சீனித்துரை, பொருளாளா் ராஜேந்திரன், நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.